தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ குறுக்கிட்டு பேசுவது யார்... தளவாயா, ஆஸ்டினா?

 குறுக்கிட்டு பேசுவது யார்... தளவாயா, ஆஸ்டினா?

 குறுக்கிட்டு பேசுவது யார்... தளவாயா, ஆஸ்டினா?


ADDED : ஆக 26, 2026 03:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 26, 2026 03:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: சட்டசபையில் நடந்த விவாதம்:

தி.மு.க., - ஆஸ்டின்: எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு ஆளும் கட்சிகள் சபையில் பதில் தருவது இல்லை. தேவையில்லாத பிரச்னைகளை சுற்றி வளைத்து, வார்த்தைகளை போடுவதால், சபாநாயகரை தர்மசங்கடத்திற்கு ஆளும் கட்சியினர் ஆளாக்குகின்றனர்.

அமைச்சர் செங் கோட்டையன்: மானிய கோரிக்கை பற்றி பேச வேண்டிய நேரத்தில், ஆளும் கட்சி பற்றி ஆஸ்டின் விவாதிக்கிறார்.

அ.தி.மு.க., - தளவாய் சுந்தரம்: ஆஸ்டின் காங்கிரஸ் கட்சியில் இருந்தார். அ.தி.மு.க.,வில் ஆறாண்டு காலம் ராஜ்யசபா எம்.பி.,யாகவும் இருந்தார். தே.மு.தி.க.,விற்கு போய் விட்டு, இப்போது தி.மு.க.,வில் இருந்து பேசிக்கொண்டு இருக்கிறார்.

தி.மு.க., - கே.என்.நேரு: தி.மு.க., - எம்.எல்.ஏ., பேசும்போது, அமைச்சர்கள் அல்லது சபை முன்னவர் பேசலாம். தேவையில்லாமல் தளவாய் சுந்தரத்திற்கு பேச அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தி.மு.க., - எ.வ.வேலு: இப்படி குறுக்கிட்டு பேச அனுமதித்தால், எப்படி சபையை நடத்த முடியும்?

எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி: அமைச்சர்கள் பேசும் போது, ஆஸ்டின் குறுக்கிடுவார்; இன்றைக்கு அவர் பேசும்போது குறுக்கீடு வருகிறது.

தளவாய் சுந்தரம் இங்கு பல வரலாறுகளை குறுப்பிட்டு பேசினார். இங்குள்ள பல தலைவர்கள், எம்.எல்.ஏ.,க்கள் பல இடங்களில் இருந்து வந்துள்ளனர். இப்போது இருக்கும் இடத்தில் உண்மையாக பணியாற்றுகின்றனர்.

சபாநாயகர் பிரபாகர்: தளவாய் சுந்தரம் விளக்கம் கேட்கிறார் என அனுமதித்தேன். விளக்கம் கேட்பதாக நினைத்தேன். அவர் தேவையற்ற விபரங்களை பேசியுள்ளார்.

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா: எதிர்க்கட்சி தலைவர் உண்மையை ஒப்புக்கொண்டதற்கு நன்றி. நாங்கள் பேசும்போது, ஆஸ்டின் எழுந்து குரல் கொடுப்பார். இன்றைக்கு தான் எங்கள் வலி அவருக்கு தெரிகிறது. அவர் பேசும் போது குறுக்கீடு வருகிறது. இனி குறுக்கீடு இல்லாமல், ஆஸ்டின் செயல்பட வேண்டும்.

உதயநிதி: இதைத்தான் நாங்கள் சொல்கிறோம்; ஒரு கேள்வியை கேட்டால், அதை திசை திருப்பும் வகையிலும், மடைமாற்றம் செய்யும் வகையிலும், அமைச்சர்கள் பேசுவர். இனி ஆஸ்டின் அடிக்கடி குறுக்கீடு செய்வார்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us