தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ போட்டியின்றி தேர்வாகும் சபாநாயகர்

 போட்டியின்றி தேர்வாகும் சபாநாயகர்

 போட்டியின்றி தேர்வாகும் சபாநாயகர்


ADDED : மே 12, 2026 02:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 12, 2026 02:53 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: சபாநாயகர், துணை சபாநாயகர் போட்டியின்றி தேர்வாகின்றனர். இன்று முறைப்படி அறிவிக்கப்பட உள்ளது.

முதல்வர் விஜய், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி உள்ளிட்ட 233 எம்.எல்.ஏ.,க்கள் நேற்று, சட்டசபையில் எம்.எல்.ஏ.,வாக பதவி ஏற்றனர்.

திருச்சி கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. தற்காலிக சபாநாயகர் கருப்பையா முன்னிலையில் அனை வரும் பதவி ஏற்றனர்.

இதையடுத்து, சட்டசபை கூட்டம் நேற்று ஒத்திவைக்கப்பட்டது. சபாநாயகர் தேர்தலில் போட்டியிட, த.வெ.க., சார்பில், சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ., ஜே.சி.டி.பிரபாகர் மனு தாக்கல் செய்துள்ளார்.

துணை சபாநாயகர் தேர்தலில் போட்டியிட, துறையூர் த.வெ.க., - எம்.எல்.ஏ., ரவிசங்கர் மனுத்தாக்கல் செய்துள்ளார். இதற்கான மனுவை, சட்டசபை செயலர் சீனிவாசனிடம், முதல்வர் விஜய் நேற்று வழங்கினார். அப்போது, அமைச்சர்கள் ஆனந்த், வெங்கடரமணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தி.மு.க., - அ.தி.மு.க., கூட்டணி சார்பில் யாரும் மனு அளிக்கவில்லை. இதையடுத்து, சபாநாயகர், துணை சபாநாயகர் போட்டியின்றி தேர்வாகின்றனர்.

இது தொடர்பான முறையான அறிவிப்பு இன்று வெளியாக உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us