தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ கட்சி சார்பின்றி செயல்படுவேன் சபாநாயகர் உறுதிமொழி

 கட்சி சார்பின்றி செயல்படுவேன் சபாநாயகர் உறுதிமொழி

 கட்சி சார்பின்றி செயல்படுவேன் சபாநாயகர் உறுதிமொழி


ADDED : மே 13, 2026 05:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 13, 2026 05:14 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: ''லோக்சபாவின் முதல் சபாநாயகர் மாவ்லங்கர் போல, கட்சி சார்பின்றி செயல்படுவேன்,'' என, சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தெரிவித்தார்.

சபாநாயகராக பதவியேற்ற பின், சட்டசபையில் அவர் பேசியதாவது:

கடந்த, 1980ல் முதன் முதலில் எம்.எல்.ஏ.,வாக, சட்டசபை வளாகத்திற்கு வந்தேன்.

பொதுவாழ்வில் என்னை வளர்த்து, ஆளாக்கியவர் எம்.ஜி.ஆர்., அவர் தான் எனக்கு வாத்தியார். அவர் மறைவுக்கு பின், ஜெயலலிதாவின் அன்பையும், நம்பிக்கையையும் பெற்று, அவருடன் பயணித்துள்ளேன்.

மூப்பனார் தனி கட்சி தொடங்கிய போது, அவரது தனி செயலராக பணியாற்றினேன். தற்போது, தமிழக வெற்றிக் கழகம், பெரும் சக்தியாக உருவெடுத்துள்ளது.

மாற்றத்திற்கான மக்களின் விருப்பம், இளைஞர்களின் அரசியல் பங்கேற்பு, நல்லாட்சிக்கான எதிர்பார்ப்பு போன்றவற்றின் வெளிப்பாடுதான், த.வெ.க.,வின் வெற்றி.

இளைஞர்கள், பெண்கள், தொழிலாளர்கள், சாதாரண மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற, ஜாதி, மதமற்ற சமுதாயத்தை உருவாக்க, விஜய் ஒருவரால் மட்டுமே முடியும் என, மக்கள் நினைத்தனர். அதனால், இந்த வெற்றி சாத்தியமானது.

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், பணம் கொடுக்காமல், த.வெ.க., வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

தேர்தல் கணிப்புகளை பொய்யாக்கி, கூட்டணி இல்லாமல், தனித்து அமைதி புரட்சியை விஜய் செய்து காட்டியுள்ளார். அவர் தமிழகத்திற்கு மட்டுமல்ல; நாட்டுக்கே வழிகாட்டும் நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது.

சபாநாயகர் பொறுப்பு வெறும் பதவி அல்ல. ஜனநாயகத்தின் மாண்பையும், மக்களின் நம்பிக்கையையும் பாதுகாக்கும் அரசியலமைப்பின் பொறுப்பு. இந்த நாற்காலியில் அமர்ந்த பின், எந்த கட்சிக்கும் சார்பில்லா மல், முழு அவையின் தலைவராக செயல்படுவேன். ஆளும் தரப்புக்கும், எதிர்க்கட்சிகளுக்கும், சம வாய்ப்பும், உரிமையும் வழங்கப்படும். அரசியல் மோதலுக்காக அல்ல. மக்கள் பிரச்னைக்கான தீர்வுகளை உருவாக்க, சட்டசபைக்கு அனுப்பியுள்ளனர்.

எனவே, சபையின் மாண்பை காப்போம். தரமான விவாதங்களை வைப்போம். தனிப்பட்ட விமர்சனங்களை தவிர்ப்போம். மக்கள் நலச் சட்டங்களை முன்னிலைப் படுத்துவோம்.

தமிழ் மொழி நமது அடையாளம் மட்டுமல்ல. நமது சிந்தனை, பண்பாடு, மரபாகும். சட்டசபையில், தமிழ்மொழி மேலும் வளமுடன் பயன்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். இங்கு பேசப்படும் ஒவ்வொரு சொல்லும், மக்களுக்கு பயன்படும் வகையில் இருக்க வேண்டும்.

லோக்சபாவின் முதல் சபாநாயகர் கணேஷ் வாசுதேவ மாவ்லங்கர் சிறப்பாக செயல்பட்டவர். அவரை போல நானும் சிறப்பாக செயல்படுவேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us