வீரவசனம் பேசினால் பாதுகாப்பை உறுதி செய்ய முடியாது; இ.பி.எஸ்., பாய்ச்சல்
வீரவசனம் பேசினால் பாதுகாப்பை உறுதி செய்ய முடியாது; இ.பி.எஸ்., பாய்ச்சல்
ADDED : மார் 13, 2025 02:18 PM

சென்னை: 'இரும்புக்கரம் என்று வாய் கிழிய வீரவசனம் பேசினால் மட்டும் தனி மனித பாதுகாப்பை உறுதி செய்து விட முடியாது' என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே வயதான விவசாயத் தம்பதியினர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
இதே திருப்பூர் மாவட்டத்தின் பல்லடம் பகுதியில், இதே போல் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்ததும், அப்போது அந்த இறந்தவரின் மனைவி, உங்கள் அமைச்சரை சரமாரியாக கேள்வி கேட்டு சாடியதெல்லாம் நினைவில் இருக்கிறதா? இல்லையா?
திருப்பூர் பகுதியில் இது போன்ற தொடர் குற்றங்கள் அதிகம் நடந்து கொண்டிருக்கிற நிலையில்,அன்றே இந்த விடியா திமுக அரசும் முறையான நடவடிக்கை எடுத்திருந்தால், இன்று இந்த கொலை நடந்திருக்குமா? அது சரி, நாட்டில் நடக்கும் கொலைகளை தனிப்பட்ட பிரச்னைகள் என்று கடந்து செல்ல மட்டும் தானே முனைகிறீர்கள்.
நடவடிக்கை
வெற்று விளம்பரம்
வீரவசனம்
