ADDED : டிச 21, 2025 01:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பல்லடம்: திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில், வரும் 29ல் தி.மு.க., மேற்கு மண்டல மகளிரணி மாநாடு நடக்கிறது.
மாநாட்டில், எம்.பி., - கனிமொழி தலைமை வகிக்கிறார்; முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று பேசுகிறார்.
தி.மு.க., ஆட்சியில், மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.இவற்றை முன்னிலைப்படுத்தும் விதமாக மாநாடு நடத்தப்பட உள்ளது.
சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மகளிரணி மாநாடு நடைபெறும் நிலையில், மகளிருக்கான சிறப்பு அறிவிப்புகளை மாநாடு வாயிலாக வெளியிடக்கூடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

