பொங்கலுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம் மேலாண்மை இயக்குனர் தகவல்
பொங்கலுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம் மேலாண்மை இயக்குனர் தகவல்
ADDED : ஜன 12, 2024 12:44 AM
சிவகங்கை:-பொங்கலை முன்னிட்டு ஜன., 14 வரை சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என அரசு போக்குவரத்து கழக கும்பகோணம் மேலாண்மை இயக்குனர் ஆர்.மோகன் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் பணிபுரியும் தென்மாவட்டத்தினர் சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக கும்பகோணம் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சென்னையில் இருந்து கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி, நன்னிலம், நாகபட்டினம், காரைக்கால், வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், திருச்சி, அரியலுார், ஜெயங்கொண்டம், கரூர், புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம், மதுரைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.
திருச்சியில் இருந்து தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர், நாகபட்டினம், புதுக்கோட்டை, மதுரைக்கும், மதுரை, கோயம்புத்துார், திருப்பூரில் இருந்து திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டைக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
தற்காலிக பஸ் ஸ்டாண்ட்
கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி, நன்னிலம், திருவையாறு, ஒரத்தநாடு வழித்தட பஸ்கள் தாம்பரம் சானிடோரியம் அண்ணாதுரை பஸ் ஸ்டாண்டில் இருந்தும், கரூர், திருச்சி, அரியலுார், செந்துறை, ஜெயக்கொண்டம், புதுக்கோட்டை, அறந்தாங்கி, ராமநாதபுரம், ராமேஸ்வரம், பரமக்குடி, மதுரை, கமுதி, முதுகுளத்துார், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, சீர்காழி, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம் வழித்தட பஸ்கள் கோயம்பேடு எம்.ஜி.ஆர்., பஸ் ஸ்டாண்டில் இருந்தும் இயக்கப்பட உள்ளன.
பொங்கல் பண்டிகைக்கு சென்னையில் இருந்தும் பிற நகரங்களுக்கு செல்ல 1,850, கோயம்புத்துார், திருப்பூர், மதுரை, திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், காரைக்குடி வழித்தடங்களில் 1,295 சிறப்பு பஸ்களும் இயக்கப்படும். பொங்கல் முடிந்து பயணிகள் திரும்ப வசதியாக ஜன., 16 முதல் 18 வரை சென்னை வழித்தடத்தில் 1,460, பிற நகர வழித்தடத்தில் 1,151 சிறப்பு பஸ்களும் இயக்கப்பட உள்ளன. பஸ் ஸ்டாண்டுகளில் பயணிகள் சேவை மையம் 24 மணி நேரமும் செயல்படும், என்றார்.

