ADDED : ஜூலை 20, 2025 05:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : மறுவாழ்வு முகாமில் வசிக்கும் இலங்கை தமிழர்களின் திருமணங்களை பதிவு செய்ய சிறப்பு முகாம்களை, பதிவுத்துறை நடத்த உள்ளது.
இது குறித்து, பதிவுத்துறை தலைவர் அறிவிப்பு:
மறுவாழ்வு முகாம்களில் வசித்து வரும் இலங்கை தமிழர்களின் திருமணங்களை பதிவு செய்வதற்காக, சிறப்பு முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சனிக்கிழமை வேலை நாட்களாக உள்ள சார் -- பதிவாளர் அலுவலகங்களில், வரும் 26ம் தேதியும், வேலை நாட்களாக இல்லாத இதர அலுவலகங்களில், 25ம் தேதி வெள்ளிக்கிழமையும் திருமணங்களை பதிவு செய்ய சிறப்பு முகாம் நடத்த, பதிவு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இதை, திருமண பதிவுக்காக காத்திருக்கும் இலங்கை தமிழர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.