கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை; ரூ.247 கோடி ஒதுக்கீடு
கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை; ரூ.247 கோடி ஒதுக்கீடு
ADDED : அக் 19, 2024 02:03 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்க ரூ.247 கோடி ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்க ரூ.247 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மத்திய அரசு நிர்ணயித்துள்ள ரூ.2,919.75 யுடன் மாநில அரசின் ஊக்கத் தொகையான ரூ.215 சேர்த்து கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ.3,134.75 கிடைக்கும்.
இந்த சிறப்பு ஊக்கத்தொகையால் சுமார் 1.20 லட்சம் கரும்பு விவசாயிகள் பயன் அடைவார்கள். 2023-24ம் ஆண்டு அரவை பருவத்திற்கு சர்க்கரை ஆலைகளுக்கு பதிவு செய்து கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

