ADDED : ஜன 24, 2026 06:13 AM
சென்னை: பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, முன்றாம் நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட, சிறப்பு பயிற்றுனர்களைப் போலீசார் கைது செய்தனர் .
தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட, மாற்றுத்திறன் மாணவர்களுக்கான, சிறப்பு பயிற்றுனர்கள் சங்கம் சார்பில், பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 21ம் தேதி முதல் சிறப்பு பயிற்றுனர்கள், சென்னையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நேற்று மூன்றாம் நாளாக, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள, டி.பி.ஐ., அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய, 200க்கும் மேற்பட்ட சிறப்பு பயிற்றுனர்களை, போலீசார் கைது செய்தனர்.
அவர்களை பஸ்சில் ஏற்றி, அண்ணாநகரில் உள்ள சமுதாய கூடத்திற்கு அழைத்து சென்றனர். அப்போது, சிறப்பு பயிற்றுனர்கள், பஸ்சில் இருந்து இறங்க மறுத்தனர்.
இதனால் கோபமடை ந்த போலீசார் மற்றும் டிரைவர், பஸ் கதவை மூடி விட் டு, கீழே இறங்கி சென்றனர். அப்போது பஸ்சிலிருந்த, சிறப்பு பயிற்றுனர் ஒருவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதும், போலீசார் கதவை திறந்தனர்.
இந்த சம்பவத்தால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

