ADDED : டிச 15, 2024 02:04 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை:'செஸ்' உலகின் இளம் சாம்பியனாகி புதிய சாதனை படைத்த இந்தியாவின் குகேஷுக்கு, சிறப்பு தபால் முத்திரை அச்சடித்து பெருமை சேர்த்துள்ளது, பெங்களூரு பொது அஞ்சலகம்.
உலக சாம்பியன் பட்டம் வென்ற, இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை, குகேஷ் தற்போது பெற்றுள்ளார். கோப்பையுடன், ரூ.11.03 கோடி பரிசுத் தொகை தட்டிச் சென்றார்.
சரித்திர வெற்றி பெற்றுள்ள இவருக்கு, பாராட்டுகள் குவிந்து வருகின்றன. 5 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும் என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், இவரை கவுரவிக்கும் வகையில், பெங்களூரு பொது அஞ்சலகம், குகேஷ் உருவத்துடன், சதுரங்க காய்கள் இருக்கும் வகையில், சிறப்பு தபால் முத்திரை அச்சிட்டுள்ளது.