தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/தீயணைப்பு அலுவலக லஞ்ச வழக்கு சிறப்பு குழு விசாரணையில் பகீர் தகவல்

தீயணைப்பு அலுவலக லஞ்ச வழக்கு சிறப்பு குழு விசாரணையில் பகீர் தகவல்

தீயணைப்பு அலுவலக லஞ்ச வழக்கு சிறப்பு குழு விசாரணையில் பகீர் தகவல்


UPDATED : அக் 09, 2026 01:23 AM

ADDED : அக் 09, 2026 01:19 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 09, 2026 01:23 AM ADDED : அக் 09, 2026 01:19 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருநெல்வேலி: திருநெல்வேலி தீயணைப்பு துறை துணை இயக்குனர் சரவணபாபு அலுவலகத்தில், 2025 நவ., 18ல் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில், 2.24 லட்சம் ரூபாய் சிக்கியது. அவரை சிக்க வைக்க திட்டமிட்டு, நள்ளிரவில் அலுவலகத்தில் பணம் வைக்கப்பட்டது, அப்பகுதியில் இருந்த சிசிடிவி பதிவுகள் மூலம் வெளிச்சத்திற்கு வந்தது.

இந்த சம்பவத்தில், முழு உண்மையை கண்டுபிடிக்க, டி.ஐ.ஜி., சந்தோஷ் ஹதிமணி தலைமையில், சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

சிறப்பு குழு விசாரணையில், சரவணபாபு அலுவலகத்தில் பணம் வைக்கப்பட்டது போல, திருச்சி, திருப்பூர் மாவட்ட தீயணைப்பு அலுவலர் அலுவலகம் உட்பட, 5 அதிகாரிகளை பணம் வைத்து சிக்க வைக்க முயன்றது தெரியவந்தது.

இதுகுறித்து, திருநெல்வேலி ஆயுதப்படை வளாகத்தில், திருச்சி தீயணைப்பு அலுவலர் ஜெகதீஷ், சென்னை தீயணைப்புத்துறை கூடுதல் இயக்குனர் சத்யநாராயணா ஆகியோரிடம் நேற்று விசாரணை நடத்தப்பட்டது.

மேலும், லஞ்ச ஒழிப்பு போலீசுக்கு தகவல் தந்த தொலைபேசி அழைப்புகள், குறிப்பிட்ட ஒரு தீயணைப்பு அதிகாரி பயன்படுத்திய ‘சிம் கார்டில்’ இருந்து வந்தது குறித்தும், இந்த விவகாரத்தில், தமிழக லஞ்ச ஒழிப்பு போலீஸ் சென்னை தலைமை அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றும் ஒருவருக்கு தொடர்பு இருப்பது குறித்தும் விசாரணை நடக்கிறது.

அக்., 17க்குள் உயர் நீதிமன்ற மதுரை கிளையில், விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us