ADDED : நவ 05, 2024 12:48 AM

சென்னை: கர்நாடகாவில், 12 கோவில்களை தரிசனம் செய்யும் வகையில், தமிழகத்தில் இருந்து முதன் முறையாக சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் இருந்து டிசம்பர், 5ம் தேதி புறப்படும் சுற்றுலா சிறப்பு ரயில், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், சென்னை எழும்பூர் வழியாக கர்நாடகா செல்லும்.
கர்நாடகாவில் உள்ள நவ பிருந்தாவனம், ஹம்பி, கோகர்ணா மஹாபலேஸ்வரா, முர்டேஸ்வரர், கொல்லுார் மூகாம்பிகை, உடுப்பி ஸ்ரீ கிருஷ்ணா, தர்மஸ்தலா மஞ்சுநாதர், குக்கே சுப்ரமண்யா, மைசூரு, ஸ்ரீரங்கப்பட்டினம், மேல்கோட்டை நரசிம்மர், நஞ்சன்கூடு ஆகிய இடங்களை காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மொத்தம் ஒன்பது நாள் சுற்றுலாவுக்கு, 'ஏசி' மூன்றாம் வகுப்பு பெட்டியில் பயணிக்க ஒருவருக்கு 29,400 ரூபாய், சிலீப்பர் வகுப்பில் 22,000 ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் தகவல்களுக்கு, 73058 58585 என்ற மொபைல் போன் எண்ணை தொடர்பு கொள்ளலாம் என, தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.