உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : மார் 08, 2026 02:04 AM

அ நிறம் | அளவு
சென்னை: ஹோலி பண்டிகை ஒட்டி, கேரளா மாநிலம் திருவனந்தபுரம் வடக்கில் இருந்து கோவை, சேலம் வழியாக, மேற்கு வங்க மாநிலம் சந்திரகாச்சிக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
↓திருவனந்தபுரம் வடக்கில் இருந்து, வரும் 13, 20ம் தேதிகளில் மதியம் 2:15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், அடுத்த மூன்றாவது நாளில் மதியம் 2:15 மணிக்கு சந்திரகாச்சி செல்லும்
↓சந்திரகாச்சியில் இருந்து, வரும் 16, 23ம் தேதிகளில் மதியம் 2:20 மணிக்கு புறப்பட்டு, அடுத்த மூன்றாவது நாளில் காலை 9:55 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கு செல்லும். இந்த சிறப்பு ரயில், கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, திருத்தணி வழியாக இயக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
