தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ துாத்துக்குடி - நரசாபூர்  இடையே சிறப்பு ரயில்

 துாத்துக்குடி - நரசாபூர்  இடையே சிறப்பு ரயில்

 துாத்துக்குடி - நரசாபூர்  இடையே சிறப்பு ரயில்


ADDED : ஆக 22, 2026 06:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 22, 2026 06:59 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மதுரை: துாத்துக்குடி - ஆந்திர மாநிலம் நரசாபூர் இடையே மதுரை, தஞ்சை வழியாக வாராந்திர சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

செப்., 7, 14, 21, 28 (திங்கள் தோறும்) இரவு 11:30 மணிக்கு துாத்துக்குடியில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (06019), புதன் அதிகாலை 12:20 மணிக்கு நரசாபூர் செல்கிறது. மறுமார்க்கத்தில் செப்., 9, 16, 23, 30 (புதன் தோறும்) அதிகாலை 4:00 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06020), மறுநாள் அதிகாலை 4:30 மணிக்கு துாத்துக்குடி செல்கிறது.

துாத்துக்குடி மேலுார், கோவில்பட்டி, சாத்துார், விருதுநகர், மதுரை, கொடைரோடு, திண்டுக்கல், திருச்சி, தஞ்சை, கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூர், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை எழும்பூர், நெல்லுார், விஜயவாடா வழியாக செல்கிறது.

ஒரு 'ஏசி' இரண்டடுக்கு படுக்கை வசதிப் பெட்டி, 2 'ஏசி' மூன்றடுக்கு படுக்கை வசதிப் பெட்டிகள், 8 ஸ்லீப்பர் பெட்டிகள், 4 பொதுப் பெட்டிகள், ஒரு மாற்றுத் திறனாளிகளுக்கான பெட்டி, 2 சரக்குப் பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது.

இன்று காலை 8:00 மணிக்கு முன்பதிவு தொடங்குகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us