தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு

 சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு

 சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு


ADDED : மே 03, 2026 04:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 03, 2026 04:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: கோடை விடுமுறையை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக சென்னையில் இருந்து துாத்துக்குடி, திருநெல்வேலிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் சேவைகளை ஜூன் வரை நீட்டித்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தாம்பரம் - துாத்துக்குடி திங்கள் தோறும் இயக்கப்படும் துாத்துக்குடி - தாம்பரம் சிறப்பு ரயில் (06018) ஜூன் 8 வரை, செவ்வாய் தோறும் இயக்கப்படும் தாம்பரம் - துாத்துக்குடி சிறப்பு ரயில் (06017) ஜூன் 9 வரை நீட்டிக்கப்பட்டுள்ளன. ரயில் (06017), தாம்பரத்தில் இருந்து மதியம் 3:30 மணிக்கு பதில் 3:40 மணிக்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தாம்பரம் - திருநெல்வேலி ஞாயிறு தோறும் இயக்கப்படும் திருநெல்வேலி - தாம்பரம் சிறப்பு ரயில் (06166) ஜூன் 7 வரை, திங்கள் தோறும் இயக்கப்படும் தாம்பரம் - திருநெல்வேலி சிறப்பு ரயில் (06165), ஜூன் 8 வரை நீட்டிக்கப்பட்டுள்ளன.

சென்னை எழும்பூர் திருநெல்வேலி வியாழன் தோறும் இயக்கப்படும் திருநெல்வேலி - எழும்பூர் சிறப்பு ரயில் (06070), ஜூன் 11 வரை, வெள்ளி தோறும் இயக்கப்படும் எழும்பூர் - திருநெல்வேலி சிறப்பு ரயில் (06069), ஜூன் 12 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us