ADDED : டிச 22, 2024 01:29 AM
கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டையொட்டி, தாம்பரம் - கன்னியாகுமரி, சென்னை சென்ட்ரல் - கொச்சுவேலிக்கு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தாம்பரத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு, வரும் 24, 31ம் தேதிகளில் நள்ளிரவு, 12:35 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், அதே நாளில் பகல், 12:15 மணிக்கு கன்னியாகுமரி செல்லும். மறுமார்க்கமாக கன்னியாகுமரியில் இருந்து, 25 மற்றும் ஜன., 1ம் தேதிகளில் மாலை 4:30க்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 4:20 மணிக்கு தாம்பரம் வரும்
சென்னை சென்ட்ரலில் இருந்து, நாளை மற்றும் 30ம் தேதி இரவு 11:20க்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் மாலை 6:05 மணிக்கு கேரள மாநிலம் கொச்சுவேலிக்கு செல்லும்.
மறுமார்க்கமாக, கொச்சுவேலியில் இருந்து, 24, 31ம் தேதிகளில் இரவு 8:20க்கு புறப்பட்டு, மறுநாள் மதியம், 2:00 மணிக்கு சென்ட்ரல் வந்தடையும். இன்று காலை 8:00 மணிக்கு முன்பதிவு துவங்குகிறது.