UPDATED : நவ 21, 2026 06:27 PM
ADDED : நவ 21, 2026 06:27 PM
சென்னை: புத்தாண்டு விடுமுறையையொட்டி, மதுரை கூடல்நகரில் இருந்து, சென்னை எழும்பூர் வழியாக, மந்திராலயம், ஷீரடி சாய்பாபா தரிசனத்திற்கு, ஆன்மிக சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
மதுரை அருகே கூடல்நகரில் இருந்து, வரும் டிச., 22ம் தேதி புறப்படும் சிறப்பு ரயில், திருச்சி, விழுப்புரம், திண்டுக்கல், எழும்பூர், ஆந்திரா மாநிலம் ரேணிகுண்டா வழியாக செல்கிறது. இந்த சுற்றுலாவில், அஹோபிலத்தில் அமைந்துள்ள ஸ்ரீ நரசிம்மர் திருக்கோவில், நவ பிருந்தாவனம், மந்திராலயம் ஸ்ரீ ராகவேந்திர சுவாமி தரிசனம், பண்டரிபூர் ஸ்ரீ விட்டல் – ருக்மிணி அம்மன் திருக்கோவில், ஷீரடி ஸ்ரீ சாய்பாபா திருக்கோவில் மற்றும் செகந்திராபாத் ராமானுஜர் கோவில் தரிசனத்துக்கு, ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மொத்தம், 10 நாட்கள் கொண்ட, ஆன்மிக சுற்றுலாவுக்கு, 3ம் வகுப்பு ‘ஏசி’ 32,850 ரூபாய், ஸ்லீப்பர் பெட்டி 22,450 ரூபாய் என, கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் தகவல் பெற, 7305858585 மற்றும் www.tourtimes.in இணையதளத்தில்தளத்தில் முன்பதிவு செய்யலாம்.
