சபரிமலை சீசனை முன்னிட்டு கோவை வழியாக சிறப்பு ரயில்கள்
சபரிமலை சீசனை முன்னிட்டு கோவை வழியாக சிறப்பு ரயில்கள்
ADDED : நவ 11, 2025 07:00 AM

கோவை: சபரிமலை சீசனை முன்னிட்டு, கோவை வழியாக மச்சிபட்டணம் - கொல்லம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு ரயில் 1 அதன்படி, மச்சிபட்டணம் - கொல்லம்(07101) வாராந்திர சிறப்பு ரயில் வரும் 14, 21, 28, டிச., 26 மற்றும் ஜன., 2 ஆகிய தேதிகளில், மச்சிபட்டணத்தில் இருந்து வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் இரவு 10.00 மணிக்கு கொல்லம் சென்றடையும்.
கொல்லம் - மச்சிபட்டணம்(07102) வாராந்திர சிறப்பு ரயில் வரும், 16, 23, 30, டிச., 28 மற்றம் ஜன., 4 ஆகிய தேதிகளில், ஞாயிறு, அதிகாலை 2.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 8.00 மணிக்கு மச்சிபட்டணம் சென்றடையும்.
மச்சிபட்டணம் - கொல்லம் சிறப்பு ரயில், போத்தனுாருக்கு, மதியம் 12.00 மணிக்கு வந்து செல்லும். கொல்லம் - மச்சிபட்டணம் சிறப்பு ரயில், போத்தனுருக்கு, காலை 11.10 மணிக்கு வந்து செல்லும்.
ஏ.சி., முதல் வகுப்பு, இரண்டடுக்கு, மூன்றடுக்கு, படுக்கை வசதி ஆகிய பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.
குடிவாடா, விஜயவாடா, தெனாலி, பாபட்லா, சைராலா, ஓங்கோல், நெல்லுார், கூடுர், ரேணிகுண்டா, காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனுார், பாலக்காடு, திருச்சூர், ஆலுவா, எர்ணாகுளம், கோட்டயம், திருவல்லா, செங்கனுார், காயம்குளம் ஆகிய ரயில்வே ஸ்டேஷன்களில் நின்று செல்லும்.
சிறப்பு ரயில் 2 நரசாபுரம் - கொல்லம்(07105) சிறப்பு வாராந்திர ரயில், வரும், 16 முதல் ஜன., 18 ம் தேதி வரை, ஞாயிறு மாலை 3.00 மணிக்கு நரசாபூரத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் 10.00 மணிக்கு கொல்லம் சென்றடையும்.
கொல்லம் - நரசா புரம்(07106) சிறப்பு வாராந்திர ரயில், வரும், 18 முதல், ஜன., 20 ம் தேதி வரை, செவ்வாய் கிழமை, அதிகாலை, 2.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.00 மணிக்கு நரசாபுரம் சென்றடையும். ஏ.சி., இரண்டடுக்கு, மூன்றடுக்கு, படுக்கை வசதி ஆகிய பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.
பாலகொளு, பீமாவரம், அகிவிடு, கய்கலாரு, குடிவாடா, விஜயவாடா, தெனாலி, பாபட்லா, சைராலா, ஓங்கோல், நெல்லுார், கூடுர், ரேணிகுண்டா, காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போ த்தனுார், பாலக்காடு, திருச்சூர், ஆலுவா, எர்ணாகுளம், கோட்டயம், திருவல்லா, செங்கனுார் காயாம்குளம் ஆகிய ரயில்வே ஸ்டேஷன்களில் நின்று செல்லும்.
நரசாபுரம் - கொல்லம் சிறப்பு ரயில், போத்தனுாருக்கு மதியம் 12.00 மணிக்கு வந்து செல்லும். கொல்லம் - நரசாபுரம் சிறப்பு ரயில், போத்தனுாருக்கு காலை 11.10 மணிக்கு வந்து செல்லும்.

