ADDED : மார் 19, 2026 01:27 AM
சென்னை: தமிழகத்தில் வெப்ப அலையால், ஒவ்வொரு ஆண்டும், 500க்கும் மேற்பட்டோர் பாதிக் கப்படுகின்றனர். குறிப்பாக உடலில் நீர்ச்சத்து குறைந்து, மயக் கம், வாதம் உள்ளிட்ட வற் றால் பாதிக்கப்படுவோர் அதிகரித்து வருகின்றனர்.
இந்த ஆண்டு தேர்தல் நடப்பதால், அரசியல் கட்சியினர் பிரசாரம் களை கட்டும்.
பெரும்பாலும், வெயில் நேரத்தில், பிரசாரம் நடப்பதால், அவற்றில் பங்கேற்போருக்கு உடல்நலம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
எனவே, மாநிலம் முழுதும், 'ஹீட் ஸ்ட்ரோக்' என்ற வெப்பவாத பாதிப்பு களுக்கு, சிகிச்சை அளிக்கும் வகையில், அனைத்து வசதிகளையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
இது குறித்து, பொது சுகாதாரத்துறை இயக்குநர் சோமசுந்தரம் கூறியதாவது:
வெயில் தாக்கத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், மாவட்ட மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளில், சிறப்பு வார்டுகள் ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
