ADDED : ஜன 08, 2026 01:51 AM

'பொங்கல் நேரத்தில் முக்கியமானவர்கள் த.வெ.க.,விற்கு வருவர்' என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். அக்கட்சிக்கு வேறு கட்சியில் இருந்து யார் செல்வர் என தெரியாது. ஆனால் அ.தி.மு.க.,வில் இருந்து யாரும் செல்ல மாட்டார்கள்.
தே.மு.தி.க., தலைவராக இருந்த விஜயகாந்த் கடைசி வரை தி.மு.க.,வை எதிர்த்தவர். எனவே, அவரின் எண்ணத்திற்கு எதிராக தே.மு.தி.க., - தி.மு.க.,வுடன் செல்லாது.
கரூர் சம்பவத்தில் உயிரிழப்புகள் நடக்கும்போது பிரசார வாகனத்தில் த.வெ.க., தலைவர் விஜய் இருந்ததால், அவரை விசாரிப்பதற்காக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதில் பழிவாங்கும் எண்ணம் இல்லை.
'ஆட்சியில் பங்கு வேண்டும்' என விருதுநகர் காங்., - எம்.பி., மாணிக்கம் தாகூர் குரல் கொடுத்துள்ளார். இதற்கு பலரும் காங்கிரசில் இருந்தே எதிர்ப்பு குரல் கொடுத்துள்ளனர். இதனால் தி.மு.க., - காங்., கூட்டணிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளது.
- ராஜேந்திர பாலாஜி, முன்னாள் அமைச்சர், அ.தி.மு.க.,

