ADDED : ஜன 30, 2024 12:54 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: காரைக்குடி அழகப்பா பல்கலை பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற சென்னை ஐ.ஐ.டி., இயக்குனர் காமகோடி நேற்று பேசியதாவது:
உலகில் அதிக இளைஞர்கள் கொண்ட நாடாக இந்தியா உள்ளது. இதில், 70 சதவீதம் இளைஞர்கள் கிராமங்களில் உள்ளனர். கிராம இளைஞர்களின் பயன்படுத்தப்படாத அறிவாற்றல், முறையாக பயன்படுத்தப்படும் போது, அனைவரையும் உள்ளடக்கிய தேச வளர்ச்சிக்கு வழி வகுக்கும்.
வரும் கல்வியாண்டு முதல் சென்னை ஐ.ஐ.டி.,யில் மாணவர் சேர்க்கையின் போது, விளையாட்டு துறையில் மாணவர்களின் செயல்பாடுகளை கருத்தில் கொண்டு, விளையாட்டு துறைக்கு பிரத்யேக இட ஒதுக்கீடு பின்பற்றப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.