ADDED : டிச 10, 2025 08:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., வெளியிட்டுள்ள பதிவு:
சி.பி.எஸ்.இ - டபுள்யு.எஸ்.ஓ., என்ற விளை யாட்டு நலச்சங்கம் ஆக்ராவில் செயல்பட்டு வந்தது தெரியவந்துள்ளது. இந்த அமைப்புக்கும், சி.பி.எஸ்.இ.,க்கும், எந்த சம்பந்தமும் இல்லை.
இது, சி.பி.எஸ்.இ., இணைப்பு பள்ளிகளின் விளையாட்டு துறையை மேம்படுத்துவதாகக் கூறி, நிதி வசூலிப்பில் ஈடுபட்டுள்ளது.
அவ்வாறு செய்யவோ, சி.பி.எஸ்.இ.,யின் பெயரை பயன்படுத்தவோ, வாரியம் எந்தவித அனுமதியையும் வழங்கவில்லை. அதனால், இணைப்பு பள்ளிகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

