தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/'கெட் அவுட் மோடி' என்று பரப்புங்கள்: தி.மு.க., தொண்டர்களுக்கு உத்தரவு

'கெட் அவுட் மோடி' என்று பரப்புங்கள்: தி.மு.க., தொண்டர்களுக்கு உத்தரவு

'கெட் அவுட் மோடி' என்று பரப்புங்கள்: தி.மு.க., தொண்டர்களுக்கு உத்தரவு


ADDED : மார் 01, 2024 12:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 01, 2024 12:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:''கடந்த தேர்தலில் 'கோ பேக் மோடி' என்று சமூக வலைதளத்தில் பரப்பியது போன்று, வரும் தேர்தலில் 'கெட் அவுட் மோடி' என்று டிரெண்டிங் செய்ய வேண்டும்,'' என, அமைச்சர் உதயநிதி பேசினார்.

கோவை, சின்னியம்பாளையத்தில் தி.மு.க., 'ஐ.டி., விங் 2.0' கூட்டத்தில் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி பேசியதாவது:

கோவையில் 'சோஷியல் மீடியா' சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இங்குள்ள அ.தி.மு.க., நபர் ஒருவரை தொடர்ந்து பதற்றத்திலேயே வைத்திருந்தீர்கள். தி.மு.க.,வை ஒழிப்பதாக கூறியவர்கள் காணாமல் போய் விட்டனர்.

உண்மையில் பா.ஜ.,வின் மாநில அணி அ.தி.மு.க.,; அக்கட்சியின் தேசிய அணி பா.ஜ., தான். மீண்டும் பா.ஜ., ஆட்சிக்கு வந்தால், 'ஒரே நாடு; ஒரே தேர்தல், ஒரே உடை; ஒரே கட்சி' என்று வந்துவிடும். ஏன் இணையதளம் கூட இருக்காது. கடந்த தேர்தலுக்கு 'கோ பேக் மோடி' டிரெண்டிங் ஆனது போன்று, இந்த தேர்தலில் 'கெட் அவுட் மோடி' என்று நீங்கள் பரப்ப வேண்டும்.

இவ்வாறு, அவர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us