UPDATED : மார் 19, 2025 03:00 AM
ADDED : மார் 19, 2025 02:05 AM
ராமேஸ்வரம்:நடுக்கடலில் மீன்பிடித்த போது இன்ஜின் பழுதாகி நின்ற விசைப்படகில் இலங்கை கடற்படை வீரர்கள் பழுது நீக்கி ராமேஸ்வரம் கரைக்கு அனுப்பினர்.
மார்ச் 17ல் இந்திய, இலங்கை எல்லையில் மீன்பிடித்த ராமேஸ்வரம் அந்தோணி என்பவரது விசைப்படகில் திடீரென இன்ஜினில் கோளாறு ஏற்பட்டு நடுக்கடலில் நின்றது. இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் மீனவர்கள் தவித்தனர். ரோந்து வந்த இலங்கை கடற்படை வீரர்கள் பழுதான படகின் மீனவர்களிடம் விசாரித்தனர். பின் ஒரு மணி நேரத்தில் இன்ஜினை சரி செய்த இலங்கை வீரர்கள் ராமேஸ்வரம் கரைக்கு செல்லும்படி மீனவர்களிடம் கூறினர். கைது செய்யாமல் மனிதநேயத்துடன் திருப்பி அனுப்பிய இலங்கை வீரர்களுக்கு நன்றி தெரிவித்த மீனவர்கள் நேற்று காலை ராமேஸ்வரம் திரும்பினர்.
படகில் சிறுவன் :
இப்படகில் இருந்த 4 மீனவர்களில் 15 வயது சிறுவன் இருந்துள்ளான். இத்தகவலறிந்த மீன்வளத்துறையினர் படகு உரிமையாளரை எச்சரித்தனர்.