ADDED : ஆக 01, 2025 12:32 AM

சென்னை:இந்திய ராணுவத்தின் தெற்கு பகுதி தளபதியாக, லெப்டினன்ட் ஜெனரல் வி.ஸ்ரீஹரி நியமிக்கப்பட்டு உள்ளார்.
இந்திய ராணுவத்தின் தெற்கு பகுதியானது, தமிழகம், கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி, லட்சத்தீவு யூனியன் பிரதேசங்களை உள்ளடக்கியது. இதற்கு தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் கரண்பீர் சிங் இருந்தார். அவரது பதவிக் காலம் நேற்றுடன் முடிவடைந்தது.
இதையடுத்து புதிய தளபதியாக, லெப்டினன்ட் ஜெனரல் ஸ்ரீஹரி நியமிக்கப்பட்டு உள்ளார். இவர், கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.
சென்னை பல்கலையில் எம்.எஸ்.சி., பாதுகாப்பு மற்றும் வியூகவியல் முடித்தார். உஸ்மானியா பல்கலையில், மேலாண்மை படிப்பில் முதுகலை, சென்னை பல்கலையில் எம்.பி.எல்., பட்டம் பெற்றுள்ளார்.
கடந்த 1987 ஜூன் 13ல், புதிதாக உருவாக்கப்பட்ட, 16 சீக்கிய இலகு காலாட்படை பட்டாலியனில் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். நாட்டின் வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளிலும், வெளிநாட் டில், 'ஐ.நா., மிஷனிலும்' பணியாற்றிய அனுபவம் உள்ளவர்.

