சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடாதிபதி சாதுர் மாஸ்ய விரதம் துவக்கம்
சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடாதிபதி சாதுர் மாஸ்ய விரதம் துவக்கம்
ADDED : ஜூலை 10, 2025 11:16 PM

சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடாதிபதிகள் ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாசன்னிதானம் மற்றும் ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதீ சன்னிதானம் ஆகியோர், நேற்று சிருங்கேரியில் முறையே தங்களது 50வது மற்றும் 11வது சாதுர் மாஸ்ய விரதத்தினை மேற்கொண்டனர்.
மூன்று பகுதிகள் கொண்ட இந்த விரிவான பூஜையில் ஸ்ரீ கிருஷ்ணருக்கும், வேத வியாசருக்கும் ஆதி சங்கரருக்கும் வழிபாடு செய்யப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, சிருங்கேரி பீடத்தினை அலங்கரித்த முந்தைய 35 பீடாதிபதிகளின் சுலோகங்களுடன் துளசி அர்ச்சனை செய்யப்பட்டது. அதன்பின், சிஷ்யர்களின் சார்பாக பாத பூஜையும், பாரதத்தில் உள்ள அனைத்து மன்னர் குடும்பங்களின் காணிக்கையும் செலுத்தப்பட்டன.
இன்று நடைபெறும் உத்தர பூஜை, காலை 9:00 மணி முதல் sringeri.net என்ற வெப்சைட்டில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும், என சிருங்கேரி மடத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- நமது நிருபர் -