ADDED : பிப் 17, 2025 12:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: 'இரண்டு பொருள் வாங்கினால், ஒன்று இலவசம்' என்ற திட்டத்தை, கோ - ஆப்டெக்ஸ் நிறுவனம், கடந்த மாதம் அறிமுகம் செய்தது.
பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. அதனால், சிறப்பாக செயல்படும், 50 விற்பனை நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டு, அங்கு ஞாயிறன்றும் விற்பனை செய்ய, 'அடுத்த மாதம் இறுதி வரை, ஞாயிறன்றும் கடைகள் திறக்கப்படும்' என, நிர்வாகம் அறிவித்தது.
இதற்கு ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் காரணமாக நேற்று ஞாயிறன்று, பெரும்பாலான கோ - ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் திறக்கப்படவில்லை.
இதுகுறித்து ஊழியர்கள் சிலர் கூறுகையில்,'தேர்வு செய்யப்பட்ட கடைகளில், பெரும்பாலானவை நேற்று திறக்கப்படவில்லை. ஓரிரு கடைகள் திறந்திருந்தாலும், அங்கும் விற்பனை அதிகம் இல்லை' என்றனர்.

