sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பூச்சாண்டி காட்டும் வேலையைத் தான் ஸ்டாலின் தொடர்ந்து செய்கிறார்; இ.பி.எஸ்., குற்றச்சாட்டு

/

பூச்சாண்டி காட்டும் வேலையைத் தான் ஸ்டாலின் தொடர்ந்து செய்கிறார்; இ.பி.எஸ்., குற்றச்சாட்டு

பூச்சாண்டி காட்டும் வேலையைத் தான் ஸ்டாலின் தொடர்ந்து செய்கிறார்; இ.பி.எஸ்., குற்றச்சாட்டு

பூச்சாண்டி காட்டும் வேலையைத் தான் ஸ்டாலின் தொடர்ந்து செய்கிறார்; இ.பி.எஸ்., குற்றச்சாட்டு


ADDED : ஜூன் 06, 2025 12:21 PM

Google News

ADDED : ஜூன் 06, 2025 12:21 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: மடைமாற்று அரசியலை நிறுத்திவிட்டு, தி.மு.க., ஆட்சியில் நடக்கும் ரவுடியசத்தையும், திருட்டுக்களையும், உருட்டுக்களால் அல்லாமல், களத்தில் நிவர்த்தி செய்வது எப்படி என்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் பேச வேண்டும் என்று அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., வலியுறுத்தியுள்ளார்.

'தொகுதி மறுவரையறை விவகாரத்தில் பா.ஜ.,வுடன் கூட்டு சேர்ந்துள்ளதன் மூலம், பழனிசாமி இந்தச் சதித்திட்டம் பற்றிப் பேசாமல் அமைதி காப்பதோடு, இந்தத் துரோகத்துக்குத் துணைபோகிறவராகவும் இருக்கிறார். டில்லி ஆதிக்கத்தின் முன் அவர் அடிபணிந்துவிட்டது இப்போது தெள்ளத் தெளிவாகியுள்ளது,' என்று முதல்வர் ஸ்டாலின் நேற்று முன்தினம் (ஜூன் 4) குற்றம்சாட்டியிருந்தார்.

இதற்கு அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., பதிலடி கொடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவரது அறிக்கை; 'அன்னைக்கி காலையில 6 மணி இருக்கும்' என்ற திரைப்பட காமெடி போல இருக்கிறது முதல்வர் ஸ்டாலினின் இந்த ட்வீட்.. தொகுதி மறுசீரமைப்பு எப்போது நடந்தாலும் அதில் தமிழகத்தின் உரிமைகள் பாதிக்கப்படக் கூடாது என்பதை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த போதே தெரிவித்தது நான். என் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. தமிழகத்தின் பிரதிநிதித்துவம் குறையும் சூழல் வந்தால், அதனை எதிர்க்கும் முதல் குரல் என்னுடையதாக தான் இருக்கும்!

கூட்டணி அறிவிக்கையின் போதே அடிமை சாசனமும் எழுதிக் கொடுக்கும் கட்சிகள் தி.மு.க., கூட்டணியில் தான் இருக்கின்றனவே தவிர, இங்கு யாரும் அப்படி இல்லை! இன்னும் வராத ஒன்றை 'புலி வருது, புலி வருது' என்று பூச்சாண்டி காட்டும் வேலையைத் தான் ஸ்டாலின் தொடர்ந்து செய்கிறார். தன் ஆட்சியின் அவலங்களை இதைவைத்து மறைக்க நினைக்கும் ஸ்டாலினின் வழக்கமான Goal Post மாற்றும் அரசியலை தமிழக மக்கள் இனியும் நம்பப் போவது இல்லை.

உண்மையில் தமிழக மக்கள் தொகுதி சீரமைப்பு குறித்தோ, ஹிந்தி திணிப்பு குறித்தோ தெளிவான மனநிலையில் இருக்கிறார்கள்.

ஆனால் தமிழகத்தின் நடக்கும் இந்த திருட்டு முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியில் மக்கள் அன்றாடம் தங்கள் வாழ்வாதரத்தை இழந்து, அவமானம் சுமந்து, வேலை வாய்ப்பு இல்லாமல், தங்கள் வீட்டுப் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாமல்தான் அவதிப் படுகிறார்கள்! ஸ்டாலின் அவர்களே- மடைமாற்று அரசியலை நிறுத்திவிட்டு, முதலில் உங்கள் ஆட்சியில் நடக்கும் ரவுடியசத்தையும், திருட்டுக்களையும், உருட்டுக்களால் அல்லாமல், களத்தில் நிவர்த்தி செய்வது எப்படி என்பது குறித்து பேசுங்கள், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us