ADDED : டிச 06, 2024 06:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : புயலால் பாதிக்கப் பட்டோருக்கு நிவாரண உதவிகள் வழங்க, முதல்வர் ஸ்டாலின் தன் ஒரு மாத ஊதியத்தை, முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினார்.
'பெஞ்சல்' புயல் காரணமாக பாதிக்கப்பட்ட விழுப்புரம், கடலுார், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில், தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு மற்றும் நிவாரண பணிகளை செய்து வருகிறது.
இந்நிலையில், புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க, முதல்வர் ஸ்டாலின் தன் ஒரு மாத ஊதியம் 80,000 ரூபாய்க்கான காசோலையை, முதல்வர் பொது நிவாரண நிதிக்கு நேற்று தலைமை செயலர் முருகானந்தத்திடம் வழங்கினார்.