'பொன்முடி மீது நடவடிக்கை எடுக்க ஸ்டாலினுக்கு பயம்'
'பொன்முடி மீது நடவடிக்கை எடுக்க ஸ்டாலினுக்கு பயம்'
ADDED : ஏப் 15, 2025 05:52 AM

திருநெல்வேலி: அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி, திருநெல்வேலி ஜங்ஷன் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள அவரது சிலைக்கு பா.ஜ., மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதன்பின் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 2001ம் ஆண்டு இதே நாளில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து புறப்பட்டபின், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எனக்கு திருநெல்வேலி தொகுதியில் வேட்புமனு அளிக்க வாய்ப்பு வழங்கினார். தற்போது மோடி, நட்டா, அமித் ஷா போன்ற தலைவர்கள் தமிழக பா.ஜ., தலைமை பொறுப்பை அளித்துள்ளார்கள்.
அம்பேத்கர் நினைவிடங்களை காங்கிரஸ் பராமரிக்காமல் இருந்தது. ஆனால் பா.ஜ., அரசு அவை அனைத்தையும் புதுப்பித்தது. தமிழகத்தில், அம்பேத்கரை சிறைச்சாலையில் அடைத்தது போன்று நினைவிடங்களில் காட்சிப்படுத்துவதை மாற்ற மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அமைச்சர் பொன்முடி பேசியது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. அவர் மீது நடவடிக்கை எடுக்க முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார். இது தொடர்பாக ஒவ்வொருவரும் வீட்டிலும் 2026 சட்டமன்ற தேர்தலில் முடிவெடுக்க வேண்டும்.
அதிமுக - பா.ஜ., கூட்டணி தொடர்பான எந்தவொரு இழுபறியும் இல்லை. துணை முதல்வர் பதவி உள்ளிட்டவை குறித்து இப்போதைக்கு பேச்சுவார்த்தை நடக்கவில்லை.
இவ்வாறு கூறினார்.