'ஸ்டாலின் தான் வேகமாக நடக்கிறார் அவர் நிர்வாகம் துாக்கத்தில் உள்ளது'
'ஸ்டாலின் தான் வேகமாக நடக்கிறார் அவர் நிர்வாகம் துாக்கத்தில் உள்ளது'
ADDED : மே 17, 2025 04:55 AM
காரைக்குடி: அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதயகுமார் அளித்த பேட்டி:
அ.தி.மு.க., அரசு நிறைவேற்றிய சாதனைகளையும், தி.மு.க., ஆட்சியில் நடக்கும் வேதனைகளையும் மக்களிடம் விளக்கிடும் நோக்கில், திண்ணைப் பிரசாரம் செய்து வருகிறோம்.
தமிழகத்தில் எந்த பிரச்னை நடந்தாலும், அதை திசை திருப்பும் வகையில், தி.மு.க., வினர் மத்திய அரசு மீது புகார் கூறுகின்றனர்.
முதல்வர் ஸ்டாலின், இல்லாத பிரச்னைக்கு தீர்மானம் போடுவது, குழு அமைப்பதை தான் செய்து வருகிறார். இதைத்தவிர, வேற எதுவும் ஸ்டாலினுக்கு தெரியாது.
ஸ்டாலின் கூட வேகமாக நடக்கிறார். ஆனால், அவருடைய நிர்வாகம் நீண்ட துாக்கத்தில் இருக்கிறது.
தி.மு.க., ஆட்சியில், கடந்த நான்கரை ஆண்டுகளில் வாங்கிய கடன் தொகை 4.50 லட்சம் கோடி ரூபாய். இதை, ரிசர்வ் வங்கி ஆதாரத்துடன் தெரிவித்துள்ளது.
இதிலிருந்தே தெரிந்துவிடும், யாருடைய நிர்வாகம் சிறந்தது என்று. தி.மு.க., ஆட்சியில், தமிழகத்தின் கடன் தான் கண்ணுக்கு தெரிகிறது. எந்த வளர்ச்சி திட்டமும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.