ADDED : ஏப் 13, 2025 02:55 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அமைச்சர் பொன்முடியை தான், முதல்வர் ஸ்டாலின் விமர்சனம் செய்ய வேண்டும். பெண்களை மதிக்காத அமைச்சர்களையும், பெண்களை அவமதிப்பவர்களையும் கட்சிப் பொறுப்புகளில் வைத்துள்ளார் ஸ்டாலின்.
அவர்களை தான், ஸ்டாலின் விமர்சனம் செய்ய வேண்டும். பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணியை பற்றி விமர்சிக்க வேண்டிய அவசியம் இல்லை. தி.மு.க.,வினர் மீது மிகப்பெரிய அதிருப்தியில் பொதுமக்கள் உள்ளனர். அந்த விரக்தியின் விளைவாகவே, இப்படி எல்லாம் பேசுகின்றனர்.
- நயினார் நாகேந்திரன்,
தலைவர், தமிழக பா.ஜ.,

