தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/தனுஷ்கோடியில் இந்திய கடற்படை தளம் அவசியம்: ராமேஸ்வரத்தில் ஸ்டாலின் பேச்சு

தனுஷ்கோடியில் இந்திய கடற்படை தளம் அவசியம்: ராமேஸ்வரத்தில் ஸ்டாலின் பேச்சு

தனுஷ்கோடியில் இந்திய கடற்படை தளம் அவசியம்: ராமேஸ்வரத்தில் ஸ்டாலின் பேச்சு


ADDED : பிப் 18, 2013 10:48 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 18, 2013 10:48 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ராமேஸ்வரம்: 'தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை தடுக்க, தனுஷ்கோடியில் இந்திய கடற்படை தளம் அமைக்க வேண்டும்' என தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் தெரிவித்தார்.



இலங்கை ராணுவம், தொடர்ந்து தமிழக மீனவர்களை தாக்கும் அவலத்தை, மத்திய அரசுக்கு உணர்த்திடும் வகையில், நேற்று ராமேஸ்வரத்தில் டெசோ அமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

தலைமை வகித்து ஸ்டாலின் பேசியதாவது: இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களை தாக்கி, மீன்களை கொள்ளையடித்து, வலைகளை சேதப்படுத்தும் சம்பவம் தொடர் கதையாக உள்ளது. தாக்குதலை தடுத்து நிறுத்தக்கோரி, பிரதமர் மன்மோன்சிங், சோனியாவுக்கு கருணாநிதி கடிதம் எழுதினார். மத்திய அரசும், இலங்கை அரசிடம் பேச்சு நடத்தியது, ஆனால், மீனவர் மீதான தாக்குதல் நிறுத்தப்படவில்லை. 1991-2011ல் இலங்கை கடற்படையினர், மீனவர்கள் மீது, 167 முறை தாக்கியதில், 85 மீனவர்கள் இறந்தனர். 146 படகுகள் பறிமுதல் செய்தும், 746 மீனவர்கள் கைதாகி, பின்னர் விடுவிக்கப்பட்டனர். இலங்கை ராணுவத்திடம் இருந்து, மீனவர்களை பாதுகாக்க, கச்சச்தீவை மீட்க வேண்டும். மேலும் தனுஷ்கோடி, மண்டபத்தில் வலுவான இந்திய கடற்படை தளம் அமைக்க வேண்டும். 'டெசோ' சார்பில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கை விடுத்துள்ளோம், இதையும் மீறி, மீனவர்கள் தாக்கப்பட்டால் நம்மை அர்ப்பணிக்கும் அளவில், போராட்டம் நடத்துவோம், என்றார். ராமேஸ்வரம் தி.மு.க., நகர் செயலாளர் நாசர்கான், துணைச் செயலாளர் வில்லாயுதம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us