தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/கொளத்துாரில் ஸ்டாலின் போட்டி? தி.மு.க., பொதுச்செயலர் விளக்கம்

கொளத்துாரில் ஸ்டாலின் போட்டி? தி.மு.க., பொதுச்செயலர் விளக்கம்

கொளத்துாரில் ஸ்டாலின் போட்டி? தி.மு.க., பொதுச்செயலர் விளக்கம்


UPDATED : நவ 21, 2026 08:04 PM

ADDED : நவ 21, 2026 08:04 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 21, 2026 08:04 PM ADDED : நவ 21, 2026 08:04 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: ‘‘கொளத்துார் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் போட்டியிடுவது குறித்து, எதுவும் ஆலோசிக்கவில்லை,’’ என, அக்கட்சி பொதுச்செயலர் துரைமுருகன் தெரிவித்தார்.

சென்னை, கொளத்துார் தொகுதி த.வெ.க., – எம்.எல்.ஏ, பாபு மரணத்தை தொடர்ந்து, அத்தொகுதி காலியாக உள்ளது. ஏற்கனவே காலியாக உள்ள, ஐந்து சட்டசபை தொகுதிகளுக்கு, இடைத்தேர்தல் நடத்தும்போது, இத்தொகுதிக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.

கடந்த சட்டசபை தேர்தலின்போது, கொளத்துார் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்த தி.மு.க., தலைவர் ஸ்டாலின், மீண்டும் இடைத்தேர்தலில் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னையில் தி.மு.க., தலைமை அலுவலகமான அறிவாலயத்தில் நேற்று மூத்த நிர்வாகிகளின் கூட்டம் நடந்தது. இதையடுத்து, தி.மு.க., பொதுச்செயலர் துரைமுருகனிடம், கொளத்துார் தொகுதியில் ஸ்டாலின் போட்டியிடுவது தொடர்பாக, ஆலோசனை நடந்ததா என, செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த துரைமுருகன், “ஆலோசனை எதுவும் நடக்கவில்லை. சும்மா பேசிக் கொண்டிருந்தோம். இடைத்தேர்தல் குறித்து எதுவும் பேசவில்லை. ஆலோசனை கூட்டம் எதுவும் நடக்கவில்லை.

ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் பொன்முடி உட்பட ஆறு பேர் தான் இருந்தோம். கட்சியின் பொருளாளர் உட்பட மற்றவர்கள் யாரும் இல்லை. எதுவாக இருந்தாலும், அவர்கள் அனைவரையும் வைத்து தான், பேசுவோம். தற்போது, சும்மா உட்கார்ந்து, ‘டிவி’ பார்த்துக் கொண்டிருந்தோம்,” என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us