ஜன., 28ல் 'ஜமாத்துகள்' மாநாடு ஸ்டாலின் பங்கேற்கிறார் காதர் மொய்தீன் தகவல்
ஜன., 28ல் 'ஜமாத்துகள்' மாநாடு ஸ்டாலின் பங்கேற்கிறார் காதர் மொய்தீன் தகவல்
ADDED : நவ 20, 2025 12:35 AM
திருச்சி: ''தி.மு.க., கூட்டணியில், ஐந்து தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பது எங்கள் விருப்பம்,'' என இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன் தெரிவித்தார்.
திருச்சியில், நேற்று அவர் அளித்த பேட்டி:
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில், வரும் ஜன., 28ம் தேதி, 'மஹல்லா ஜமாத்துகள் மாநாடு' நடக்கிறது.
கும்பகோணம் சுவாமிமலையில் நடக்கும் இந்த மாநாட்டில், தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார்.
எஸ்.ஐ.ஆர்., எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி தொடர்பாக, எங்கள் கட்சி சார்பில் உச்ச நீதிமன்றத்திலும், கேரளா உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளோம். பீஹார் போல பிரச்னை வரக்கூடாது என்பதற்காக நீதிமன்றம் சென்று உள்ளோம்.
கடந்த சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் மூன்று தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அவற்றில் தோல்வி அடைந்தோம்.
வரும் 2026 சட்டசபை தேர்தலில், ஐந்து தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பது எங்கள் விருப்பம்.
முஸ்லிம்கள், 16 தொகுதிகளில் போட்டியிடுவதற்கு, மறைந்த தி.மு.க., தலைவர் கருணாநிதி வாய்ப்பு கொடுத்தார். வரும் தேர்தலில் அதை சுட்டிக்காட்டி வலியுறுத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

