ADDED : அக் 19, 2024 07:26 PM
ஒவ்வொரு முறையும் வெள்ள நிவாரண பணிகள் குறித்து முதல்வரிடமும், துணை முதல்வரிடமும் கேட்டால், இந்த விஷயத்தில் யாரும் அரசியல் செய்ய வேண்டாம் என்கின்றனர்.
ஆனால், தி.மு.க., எதிர்கட்சியாக இருந்து, பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க., ஆட்சி இருந்தபோது, அந்த அரசுக்கு எதிராக கடும் விமர்சனங்களை தி.மு.க., தலைவர் ஸ்டாலின் வைத்தார். மழை-வெள்ள விவகாரங்களில் அரசியல் செய்யாதீர்கள் என, ஸ்டாலினை நோக்கி பழனிசாமி கேட்டுக் கொண்டார். ஆனால், தி.மு.க., தலைவர் ஸ்ஆலின் அப்போது என்ன சொன்னார் தெரியுமா? அரசியல் செய்ய வேண்டாம் என்றால், நாங்கள் என்ன அவியல் செய்வதற்காகவா கட்சி நடத்துகிறோம் என கேட்டார்.
துணை முதல்வர் உதயநிதி, தன்னுடைய கட்சியின் சின்னமான உதயசூரியன் சின்னத்தை டி-ஷர்டில் பதித்துக் கொண்டு, அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது சரியல்ல. அந்த விவகாரம், கோர்ட் வரை சென்றிருக்கிறது. நியாயமானவராக இருந்தால், தானே அதை தவிர்த்திருக்க வேண்டும்.
வேலூர் இப்ராஹிம்,
தலைவர், பா.ஜ., தேசிய சிறுப்பான்மை பிரிவு தலைவர்