'உங்களுடன் ஸ்டாலின்' முகாமா 'ஊழலுடன் ஸ்டாலின்' முகாமா
'உங்களுடன் ஸ்டாலின்' முகாமா 'ஊழலுடன் ஸ்டாலின்' முகாமா
ADDED : ஜூலை 24, 2025 02:18 AM
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் நகராட்சியில், 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில், குடிநீர் இணைப்புக்கு பெயர் மாற்றக் கோரி விண்ணப்பித்த வழக்கறிஞரிடம், நகராட்சி ஊழியர் லஞ்சம் கேட்டுள்ளார். தி.மு.க., ஆட்சியில் எங்கும், எதிலும் லஞ்சம் என்ற சூழல் நிலவும் நிலையில், இது அதிர்ச்சி அளிக்கவில்லை. தமிழகத்தில் நடப்பது, தி.மு.க., ஆட்சி என்பதையே, இந்த நிகழ்வு, உறுதி செய்திருக்கிறது.
'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தில், எந்த புதுமையும் இல்லை. குறைந்தபட்சம் இந்த முகாம்களில் பெறப்படும் கோரிக்கை மனுக்கள் மீதாவது, லஞ்சம் வாங்காமல் நடவடிக்கை எடுத்திருக்கலாம். ஆனால், விண்ணப்ப மனுவில் இருந்த அலைபேசி எண்ணை எடுத்து, லஞ்சம் கேட்டு, அரசு ஊழியர் கட்டாயப்படுத்தி இருக்கிறார்.
இதனால், 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்களா அல்லது 'ஊழலுடன் ஸ்டாலின்' முகாம்களா என்ற கேள்வி எழுகிறது. இந்த முகாமால் எந்த பலனும் கிடையாது. இதற்கு பதில், சேவை உரிமைச் சட்டத்தை நிறைவேற்றினாலேயே, அரசின் அனைத்து சேவைகளும் லஞ்சம் இல்லாமல் மக்களுக்கு கிடைக்கும்.
- அன்புமணி பா.ம.க., தலைவர்