ADDED : மே 30, 2025 05:38 AM

கோடநாடு கொலை வழக்கை, இரண்டு மாதங்களில் விசாரணை செய்து, நீதியை நிலை நாட்டுவோம் என தி.மு.க., தெரிவித்து நான்கு ஆண்டுகளாகிறது. ஆனால், எந்த நீதியும் நிலை நாட்டப்படவில்லை. துாத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்த விசாரணை அறிக்கை அரசிடம் அளிக்கப்பட்டு பல மாதங்களாகிறது. ஆனால், அந்த அறிக்கை மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இப்படி எல்லா விஷயங்களிலும் கும்பகர்ண துாக்கத்தை மேற்கொள்ளும் தி.மு.க., அரசு, கோர்ட் உத்தரவின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு, தீர்ப்பு வெளியாகி இருக்கும் அண்ணா பல்கலை பாலியல் சீண்டல் வழக்கு விசாரணையை நாங்கள்தான் விரைவுபடுத்தினோம் என பச்சைப்பொய் கூறுகிறது. அதேபோல, பொள்ளாச்சி பாலியல் வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்புக்கும் நாங்கள்தான் காரணம் என ஸ்டாலின் கூறுவது வேடிக்கை.
தமிழகத்தில், தி.மு.க., வீழ்த்த முடியாத கட்சி அல்ல; ஏற்கனவே, எதிர்க்கட்சியாகக் கூட வரமுடியாத அளவுக்கு தோல்வி அடைந்த வரலாறு உண்டு.
- சீமான்,
தலைமை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி

