கோர்ட்டில் வழக்கு இருந்தாலும் தகவல் தர அதிகாரிக்கு தடையில்லை மாநில ஆணையம் உத்தரவு
கோர்ட்டில் வழக்கு இருந்தாலும் தகவல் தர அதிகாரிக்கு தடையில்லை மாநில ஆணையம் உத்தரவு
ADDED : அக் 27, 2025 12:47 AM
சென்னை: 'நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்தாலும், தடையாணை இல்லாவிட்டால், பொது தகவல் அலுவலர் தகவல் வழங்கலாம்' என, மாநில தகவல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் கோட்டார் பகுதியை சேர்ந்தவர் சுப்ரமணியன். இவர், 2022ம் ஆண்டு, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், நாகர்கோவில் மாநகராட்சியிடம் சில தகவல்களை கோரியிருந்தார். அதற்கு, பொது தகவல் அலுவலர் அளித்த பதில் திருப்தி அளிக்காததால், மேல்முறையீடு செய்தார்.
இந்த மனு மீதான விசாரணையின் போது, சுப்ரமணியன், 'நான் அளித்த மனுவிற்கு, காலம் தாழ்த்தி மூன்று ஆண்டு களுக்கு பின்னரே தகவல் கிடைத்தது. அந்த தகவலு ம் திருப்திகரமாக இல்லை.
'நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ள போது, தகவல் வழங்க வழிவகை இல்லை எனக்கூறி, தகவல் வழங்க மறுத்த பொது தகவல் அலுவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.
இரு தரப்பினரையும் விசாரித்த பின், மாநில தகவல் ஆணையர் இளம்பரிதி பிறப்பித்த உத்தரவு:
நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால், தகவல் தர இயலாது என, பொது தகவல் அலுவலர் பொத்தாம் பொதுவாக தெரிவித்துள்ளார். ஒரு வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்பதற்காக, தகவல் அளிக்க மறுக்க முடியாது. நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்து இருந்தால் மட்டுமே, தகவல் வழங்க மறுக்க வேண்டும்.
பொது தகவல் அலுவலர், பொருத்தமற்ற பிற வழக்குகளின் எண்களை குறிப் பிட்டு, தகவல் தர மறுப்பது, குடிமக்களின் தக வல் பெறும் அடிப்படை உரி மையையும் மீறுவதாகும்.
எனவே, நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்தாலும், தடையாணை இல்லாதபட்சத்தில், பொது தகவல் அலுவலர், மனுதாரர் கேட்கும் தகவல்களை வழங்க வேண்டும்.
கா ல தாமதமாக தகவல் வழங்கிய பொது தகவல் அலுவலரின் செயல் கண்டிக்கத்தக்கது. எதிர்காலத்தில் இது போன்ற நிகழ்வுகள் நடந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

