மாநில கல்வி கொள்கை: முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியீடு
மாநில கல்வி கொள்கை: முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியீடு
ADDED : ஆக 08, 2025 07:15 AM

சென்னை; மத்திய அரசு செயல்படுத்தும் தேசிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக, தமிழக அரசின் சார்பில், புதிதாக வடிவமைக்கப்பட்ட மாநில கல்விக் கொள்கையை, இன்று முதல்வர் ஸ்டாலின் வெளியிடுகிறார்.
மத்திய அரசு, 2020 முதல் நாடு முழுதும் ஒரே மாதிரியான கல்விக் கொள்கையை செயல்படுத்தும் வகையில், புதிய கல்விக் கொள்கையை அறிவித்தது. அதை, தமிழக அரசு தொடர்ந்து எதிர்த்து வருகிறது. அதற்கு மாற்றாக, மாநில அரசே தனி கல்விக் கொள்கையை வெளியிடும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி டி.முருகேசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, கொள்கை உருவாக்கப்பட்டு, ஓராண்டு நிறைவடைந்துள்ளது.
அந்த கொள்கை எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், திருத்தப்பட்ட மாநில கல்விக் கொள்கையை, முதல்வர் ஸ்டாலின் இன்று, சென்னை அண்ணா நுாற்றாண்டு நுாலகத்தில் வெளியிடுகிறார்.