ADDED : ஆக 14, 2025 03:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:மாநில கல்விக் கொள்கை தொடர்பாக, மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்களின் கேள்விகளுக்கு, அமைச்சர் மகேஷ் பதில் அளித்து வருகிறார்.
தமிழக பள்ளிக்கல்வித் துறைக்கு, தனியாக மாநில கல்வி கொள்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இதை, சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். இது, வரவேற்பையும், விமர்சனத்தையும் சந்தித்து வருகிறது.
இந்நிலையில், மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள், மாநில கல்விக் கொள்கை தொடர்பான சந்தேகங்களுக்கு, பதில் கேட்டு, அவருக்கு கடிதம் மற்றும் வீடியோ அனுப்புகின்றனர். அவற்றுக்கு, அமைச்சர் மகேஷ் பதில் அளித்து வருகிறார். அந்த கேள்வி, அதற்கு அவர் அளித்த பதில் தொடர்பான வீடியோக்களை, அவரது சமூக வலைதள பக்கங்களில் பதிவேற்றம் செய்து வருகிறார்.