ADDED : ஆக 14, 2025 03:22 AM
சென்னை:ஒப்புதல் அளிப்பதிலும், நிலம் கையகப்படுத்துவதிலும், மாநில அரசு மெத்தனம் காட்டுவதால், தமிழகத்தில், 48 ரயில்வே மேம்பால பணிகள் தாமதமாக நடப்பதாக, தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரயில்களின் இயக்கத்தால் ஏற்படும் விபத்து இறப்பு குறைந்து வருகிறது.
ரயில்வே பாதுகாப்பு விதிகளை மீறி, ரயில் பாதையை கடப்பது, மொபைல் போன் பேசிக் கொண்டே ரயில் பாதைகள் அருகே நடந்து செல்வது, சிக்னல் விதிகளை மீறுவது, 'போட்டோ, வீடியோ, செல்பி' எடுப்பது உள்ளிட்ட செயல்களால் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன.
எனவே, ரயில் தண்டவாளங்களை பயணியர் கடந்து செல்வதை தடுக்க, தற்போதுள்ள ரயில்வே கேட்களை நீக்கி விட்டு, அங்கு சுரங்கப்பாதை அல்லது மேம்பாலங்கள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
தமிழகத்தில் தற்போது, 235 ரயில் மேம்பாலம், சுரங்கப்பாலம் அமைக்கப்பட்டு வருகின்றன. இதில், 82 பணிகளில், மாநில அரசால் தாமதம் ஏற்பட்டு வருகிறது.
குறிப்பாக, நிலம் கையகப்படுத்துவதில் செய்த தாமதம் காரணமாக, 22 மேம்பாலங்கள் மற்றும் 'வெவல் கிராசிங் கேட்' மூட, மாநில அரசு ஒப்புதல் தராதது காரணமாக, 26 மேம்பால பணிகளில் அதிக தாமதம் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.