மாநில வளர்ச்சிக்கு மத்திய அரசு தடை மா.கம்யூ., மாநில செயலாளர் குற்றச்சாட்டு
மாநில வளர்ச்சிக்கு மத்திய அரசு தடை மா.கம்யூ., மாநில செயலாளர் குற்றச்சாட்டு
ADDED : பிப் 09, 2024 05:22 AM

கடலுார்: மாநில வளர்ச்சியை, மத்திய அரசு தடுப்பதாக மா.கம்யூ., மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பேசினார்.
மாநில உரிமைகளை பறிக்கும் மத்திய அரசு-கவர்னர்களை கண்டித்து கடலுாரில் மா.கம்யூ., சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் மாதவன் தலைமை தாங்கினார். மாநகர செயலாளர் அமர்நாத் வரவேற்றார். மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், தி.மு.க.,சார்பில் அய்யப்பன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ., புகழேந்தி, மாநகர செயலாளர் ராஜா, ம.தி.மு.க., மாவட்ட செயலாளர் ராமலிங்கம், வி.சி., கட்சி சார்பில் துணை மேயர் தாமரைச்செல்வன், காங்., மாநில செயலாளர் சந்திரசேகரன், இந்திய கம்யூ., துணை செயலாளர் குளோப், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முகமது ரகுமான், த.மு.மு.க., ரகீம் கண்டன உரையாற்றினர்.
மாநிலக் குழு உறுப்பினர் ரமேஷ் பாபு, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆறுமுகம், உதயகுமார், மருதவாணன், கருப்பையன், சுப்பராயன் பங்கேற்றனர்.
மா.கம்யூ., மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பேசுகையில், 'மத்திய அரசு, மாநில உரிமைகள் மீதான தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகிறது. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் சட்டசபையில் நிறைவேற்றும் மசோதாக்களுக்கு கவர்னர்களை பயன்படுத்தி ஒப்புதல் தர மறுக்கிறது.
போதிய நிதி வழங்க மறுப்பதுடன், மாநிலங்களின் வளர்ச்சிக்கு கடன் பெறுவதற்கும் தடை விதிக்கிறது. கூட்டாட்சி தத்துவத்தை சிதைப்பது போன்ற வேலைகளை மத்திய அரசு செய்கிறது. தமிழ்நாடு, கேரளா மாநிலங்களில் ஆளுநர்களை பயன்படுத்தி அரசுகளை செயல்படாமல் முடக்கு முயல்கிறது என்றார்.

