எஸ்.டி.பி.ஐ., கட்சி உறுப்பினரை டில்லி அழைத்து சென்று விசாரணை
எஸ்.டி.பி.ஐ., கட்சி உறுப்பினரை டில்லி அழைத்து சென்று விசாரணை
ADDED : மார் 22, 2025 05:51 AM
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில் எஸ்.டி.பி.ஐ., கட்சி உறுப்பினரை கைது செய்த அமலாக்க துறையினர், டில்லி நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தி உள்ளனர்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள எஸ்.டி.பி.ஐ., கட்சி பொதுச்செயலர் ராஜிக், உறுப்பினர் வாஹித்துார் ரகுமான் வீடுகளிலும், பஸ் ஸ்டாண்டில் உள்ள பழக் கடையில் ரீலா என்பவரிடமும், மத்திய அரசின் அமலாக்க துறையினர், நேற்று முன்தினம் சோதனையில் ஈடுபட்டனர்.
பழக்கடையில் சிறிது நேரம் சோதனை முடிந்த பின், ராஜிக், வாஹித்துார் ரகுமான் ஆகியோர் வீடுகளிலும், காலை முதல் மாலை வரை, அமலாக்கதுறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
இதில், மேட்டுப்பாளையம் நியூ எக்ஸ்டென்ஷன் -2வது வீதியில் வசிக்கும் வாஹித்துார் ரகுமான், 27, என்பவரிடம் அமலாக்கதுறை அதிகாரிகள் விசாரணை செய்தனர்.
இதில் சட்ட விரோதமாகபண பரிவர்த்தனையில், அவர் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து, அமலாக்க துறை அதிகாரிகள், வாஹித்துார் ரகுமானை கைது செய்து, விமானத்தில்டில்லிக்கு அழைத்துசென்றனர்.
அங்கு விசாரணைக்கு பிறகு, நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தினர்.