sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 5 லட்சம் சந்தன மரக்கன்றுகள் வழங்க நடவடிக்கை: முதல்வர்

/

 5 லட்சம் சந்தன மரக்கன்றுகள் வழங்க நடவடிக்கை: முதல்வர்

 5 லட்சம் சந்தன மரக்கன்றுகள் வழங்க நடவடிக்கை: முதல்வர்

 5 லட்சம் சந்தன மரக்கன்றுகள் வழங்க நடவடிக்கை: முதல்வர்


ADDED : பிப் 18, 2026 05:58 AM

Google News

ADDED : பிப் 18, 2026 05:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: ''தமிழகம் முழுதும் நடவு செய்வதற்காக, ஐந்து லட்சம் சந்தன மரக்கன்றுகள், மக்களுக்கு வழங்கப்படும்,'' என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

தமிழக காலநிலை உச்சி மாநாடு, சென்னையில் நேற்று துவங்கியது. மாநாட்டை துவக்கி வைத்து, முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

காலநிலை மாற்றம் என்பது எங்கோ நடக்கும் விஷயம் அல்ல. தமிழகம் போன்ற கடலோர மாநிலங்கள், காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை, தினமும் சந்தித்து வருகின்றன.

இதனால், ஒவ்வொரு செயலிலும், காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை சமாளிக்கும் வழிமுறைகளை பின்பற்ற வேண்டியது அவசியமாகிறது.

சென்னையில் தற்போது, 350 மின்சார பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தமிழகம் முழுவதும், 7,738 மின்சார பேருந்துகள் பயன்பாட்டில் உள்ளன. வரும், 2030க்குள் அரசு போக்குவரத்து கழகங்களில், 33 சதவீதம் மின்சார பேருந்துகளாக இருக்க வேண்டும் என, திட்டமிடப்பட்டுள்ளது.

மின்சார வாகனங்களுக்கான சாலை வரி விலக்கு, 2027 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள, 'ஸ்பாஞ்ச் பூங்கா' திட்டங்கள், பிற மாவட்டங்களுக்கு விரிவாக்கப்படும். நீலகிரி, கோவை, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில், கார்பன் சமநிலை மையங்கள் ஏற்படுத்தப்படும்.

பசுமை பரப்பு மேம்பாட்டுக்காக, தமிழகம் முழுதும் நடவு செய்வதற்காக, 5 லட்சம் சந்தன மரக்கன்றுகள், மக்களுக்கு வழங்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தமிழகத்தில் ஒலி மாசு ஏற்படும் இடங்கள் குறித்த வரைபடம், கடலில் மாசு ஏற்படுவதை தடுக்க, நெய்தல் திட்ட ஆய்வறிக்கை, ஆகியவை வெளியிடப்பட்டன.






      Dinamalar
      Follow us