தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/மணல் வழக்கில் சிக்கியவர்களை இடமாற்றம் செய்ய நடவடிக்கை

மணல் வழக்கில் சிக்கியவர்களை இடமாற்றம் செய்ய நடவடிக்கை

மணல் வழக்கில் சிக்கியவர்களை இடமாற்றம் செய்ய நடவடிக்கை


UPDATED : நவ 18, 2026 08:57 PM

ADDED : நவ 18, 2026 08:52 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 18, 2026 08:57 PM ADDED : நவ 18, 2026 08:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: மணல் முறைகேடில் சிக்கிய பொறியாளர்கள், சாட்சியங்களை கலைக்காமல் இருக்க, அவர்களை 100 கி.மீ.,க்கு அப்பால் இடமாற்றம் செய்ய, நீர்வளத்துறை நடவடிக்கை எடுத்து வருவதாக, தகவல் வெளியாகி உள்ளது.

தி.மு.க., ஆட்சியில் நடந்த மணல் கொள்ளை தொடர்பாக, லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். முதல் தகவல் அறிக்கையில், 24 பேரின் பெயர்கள் சேர்க்கப்பட்டு உள்ளன. நீர்வளத்துறை அமைச்சராக இருந்த துரைமுருகன், முதன்மை தலைமை பொறியாளர்களாக இருந்து, ஓய்வு பெற்ற ராமமூர்த்தி, முத்தையா உள்ளிட்டோருடன், தற்போது பணியில் உள்ள பொறியாளர்கள் பெயர்களும் இடம் பெற்றுள்ளன.

குவாரிகளில், அந்த நேரத்தில் பணியாற்றிய பொறியாளர்கள் பெயர்களை, ஆவணங்கள் வாயிலாக ஆய்வு செய்து, வழக்கில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சேர்த்துள்ளனர். இதனால், உயர் அதிகாரிகள் உத்தரவின்படி பணியாற்றிய, பொறியாளர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில், வழக்கில் சிக்கியுள்ள பொறியாளர்கள், சாட்சியங்களை கலைக்காமல் தடுக்க, அவர்களை 100 கி.மீ.,க்கு அப்பால் பணியிடமாற்றம் செய்வதற்கான நடவடிக்கைகளை, நீர்வளத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதே நேரம் வழக்கில் சிக்கிய, ஓய்வு பெற்ற அதிகாரிகள் மூன்று பேர், வெளிநாடுகளுக்கு தப்பி சென்றதும் தெரிய வந்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us