தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ஸ்டெர்லைட் போராட்டத்தில் பாதிப்பு கூடுதல் நிவாரணம் வழங்க உத்தரவு

ஸ்டெர்லைட் போராட்டத்தில் பாதிப்பு கூடுதல் நிவாரணம் வழங்க உத்தரவு

ஸ்டெர்லைட் போராட்டத்தில் பாதிப்பு கூடுதல் நிவாரணம் வழங்க உத்தரவு


UPDATED : நவ 11, 2026 08:45 PM

ADDED : நவ 11, 2026 08:42 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 11, 2026 08:45 PM ADDED : நவ 11, 2026 08:42 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: ஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்தவர்கள், படுகாயம் அடைந்தவர்களுக்கு, கூடுதல் நிவாரணம் வழங்க, முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக அரசின் அறிக்கை:

கடந்த 2018 மே 22 மற்றும் 23ம் தேதிகளில், துாத்துக்குடியில் நடந்த, ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை எதிர்ப்பு போராட்டத்தில், 13 பேர் உயிரிழந்தனர். இவர்களின் குடும்பங்களுக்கு, தலா 25 லட்சம் ரூபாய், படுகாயமடைந்த 40 பேரின் குடும்பங்களுக்கு தலா ஐந்து லட்சம் ரூபாய், ஏற்கனவே நிவாரண நிதியாக, அரசால் வழங்கப்பட்டுள்ளது.

போராட்டத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், கூடுதல் நிவாரணம் கோரி, முதல்வர் விஜயிடம் முறையிட்டனர். ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் பரிந்துரைப்படி, உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு, ஏற்கனவே வழங்கிய 25 லட்சம் ரூபாயுடன், கூடுதலாக தலா 25 லட்சம் ரூபாய் வழங்க முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

படுகாயமடைந்த 40 பேரின் குடும்பத்திற்கு, ஏற்கனவே வழங்கிய ஐந்து லட்சம் ரூபாயுடன், கூடுதலாக தலா ஐந்து லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு, கூடுதல் நிவாரண தொகை 5.25 கோடி ரூபாய் வழங்கப்பட உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us