உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : ஏப் 22, 2026 04:46 PM
அ நிறம் | அளவு
வேடசந்துார்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்துார் அருகே மளிகைக்கடையின் பூட்டை உடைத்து ரூ.ஒரு லட்சத்து 15 ஆயிரம், பொருட்களை திருடிய மர்மநபர்கள் அங்கிருந்த ஆவணங்களை தீ வைத்து எரித்தனர்.
குட்டம் சுக்காம்பட்டியில் மளிகைக் கடை நடத்தி வருபவர் குமரவேல் 50. நேற்று காலை கடையை திறக்க வந்த போது பூட்டு உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறிக் கிடந்தன. உள்ளே சென்று பார்த்தபோது கல்லாவில் வைத்திருந்த ரூ.ஒரு லட்சத்து 15 ஆயிரம் , மளிகைப் பொருட்களை மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரிந்தது. அவரது குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டை உள்ளிட்ட சில ஆவணங்கள் தீவைத்து எரித்துள்ளனர். வேடசந்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.
