ADDED : ஜன 25, 2026 05:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பான, 'ஆக்டோ ஜியோ'வின் அறிக்கை:
பணி நிரந்தரம் கோரிக்கையை வலியுறுத்தி, கடந்த 8ம் தேதி முதல், பகுதிநேர ஆசிரியர்கள் போராடி வருகின்றனர்.
தற்போது, பகுதிநேர ஆசிரியர்கள், அவர்கள் பணியாற்றிய காலத்துக்கு ஏற்ப, சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம் செய்யப்படுவர் என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது, ஆசிரியர்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறது.
இடைநிலை ஆசிரியர்கள் கோரிக்கை தொடர்பாக, எந்தவித அறிவிப்பும் வெளியிடாதது வருத்தம் அளிக்கிறது. மாணவர்களின் நலனில், தி.மு.க., அரசுக்கு அக்கறை இல்லை. ஆக்டோ - ஜியோ சார்பில், பிப்., 3ம் தேதி வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு கூறப் பட்டுள்ளது.

