sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பக்கவாத விழிப்புணர்வு: சிம்ஸ் மருத்துவமனையுடன் கைகோர்த்த தினேஷ் கார்த்திக்

/

பக்கவாத விழிப்புணர்வு: சிம்ஸ் மருத்துவமனையுடன் கைகோர்த்த தினேஷ் கார்த்திக்

பக்கவாத விழிப்புணர்வு: சிம்ஸ் மருத்துவமனையுடன் கைகோர்த்த தினேஷ் கார்த்திக்

பக்கவாத விழிப்புணர்வு: சிம்ஸ் மருத்துவமனையுடன் கைகோர்த்த தினேஷ் கார்த்திக்

1


ADDED : அக் 30, 2024 01:04 PM

Google News

ADDED : அக் 30, 2024 01:04 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சிம்ஸ் மருத்துவமனை 'வரும் முன் காப்போம்' என்பதற்கேற்ப நோய்களை தடுக்க பல்வேறு ஆரோக்கிய செயல்முறைகளை விழிப்புணர்வூட்டும் வகையில் முன்னெடுத்து வருவதை அறிவோம். அந்த வகையில் பக்கவாத விழிப்புணர்வு தினத்தை நேற்று (அக்.,29) கொண்டாடியது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் இந்திய கிரிக்கெட் தினேஷ் கார்த்திக் சிம்ஸ் மருத்துவமனையுடன் இணைந்து இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் பக்கவாத பாதிப்புக்கு பிறகு உயிர் பிழைத்தவர்கள், சுகாதார நிபுணர்கள் மற்றும் 20 கார்ப்பரேட் குழுவின் பணியாளர்கள் உட்பட பலதரப்பட்ட தனிநபர்களை குழுவாக இணைத்து பக்கவாத விழிப்புணர்வை அதிகரிக்கும் வகையில் வெற்றிகரமாக கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியை சிறப்பிக்கும் விதமாக 'Strike Against Stroke' கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. இதில் கார்ப்பரேட் அணிகள் மற்றும் சுகாதார வல்லுநர்கள் இருவேறு அணிகளாக மோதிக்கொண்டனர். நட்பு ரீதியாக இந்த போட்டி நடத்தப்பட்டது. மகிழ்ச்சியுடன் களமிறங்கிய இப்போட்டியின் முடிவில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) வெற்றி பெற்றது. மேலும் ஈக்விடாஸ் ஸ்மால் பைனான்ஸ் பேங்க் 2வது இடத்தையும், பிரேக்ஸ் இந்தியா அணி 3வது இடத்தையும் பிடித்தது.

இந்த போட்டியானது தனித்துவமான முன்முயற்சியாக உடல் செயல்பாடு மற்றும் ஆரோக்கிய வாழ்க்கை முறையை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் நடத்தப்பட்டது. மேலும் பக்கவாதத்தை தடுக்க சுறுசுறுப்பாக உடல் ரீதியாக இருப்பதன் முக்கியத்துவத்தையும் இவை உணர்த்தியது.

அறிவுரை


ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு விழிப்புணர்வை அளிக்கும் வகையில் செயல்பட்ட இந்த நிகழ்ச்சி குறித்து முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் கூறுகையில், ''பக்கவாதம் தடுப்பு நிகழ்ச்சி விழிப்புணர்வை ஒட்டிய இந்த பங்கேற்பில் நானும் ஒரு பகுதியாக இருப்பது பெருமை அளிக்கிறது. பக்கவாதம் உடல் ஆரோக்கியத்தை மோசமாக பாதித்து பேரழிவு அளிக்க கூடியது. ஆனால் ஆரோக்கியமான உடல் செயல்பாடு மற்றும் உடல் தகுதியை தொடர்ந்து நிர்வகிப்பதன் மூலம் இந்த பக்கவாதத்தை தடுக்க முடியும். அதனால் அனைவரும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைப்பிடிக்க வேண்டும். மேலும் பக்கவாத அறிகுறிகள் ஏதேனும் தெரிந்தால் தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும்,'' என அறிவுறுத்தினார்.

உலகத்தர சிகிச்சை


எஸ்.ஆர்.எம்., குழுமத்தின் தலைவர் டாக்டர் ரவி பச்சமுத்து கூறியதாவது: சிம்ஸ் மருத்துவமனை மருத்துவ சிகிச்சையில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வெற்றிகரமாக சிகிச்சை செய்து உலகத்தரம் வாய்ந்த சிகிச்சை அளிப்பதை குறிக்கோளாக கொண்டு செயல்படுகிறது. அந்த வகையில் பக்கவாத அறிகுறிகள் மற்றும் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களது வாழ்க்கைத்தரத்தை மீட்டெடுத்துள்ளோம். மேலும் பக்கவாத விழிப்புணர்வு தினத்தில் தினேஷ் கார்த்திக் அவரது ஆதரவிற்காகவும், பக்கவாதத்திலிருந்து உயிர் பிழைத்தவர்களது இதயங்களில் நம்பிக்கையை மேலும் அதிகரிக்க செய்த நிலையில் அவருக்கு எப்போதும் நன்றி செலுத்த கடமைப்பட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

உத்வேகம்


சிம்ஸ் மருத்துவமனை நடத்திய இந்த கிரிக்கெட் போட்டியில் பங்கேற்ற பக்கவாதத்திலிருந்து தப்பிய ஒருவர், இந்த நிகழ்வு எனக்கு நம்பிக்கையையும் வாழ்க்கையின் மீதான உத்வேகத்தையும் அளித்திருப்பதாக தெரிவித்தார். மேலும் இந்த பக்கவாத விழிப்புணர்வு நோக்கத்திற்காக பலரும் ஒன்றிணைவதை பார்க்கும்போது அவை மேலும் உற்சாகமளிக்கிறது என்றும் இதற்காக நன்றி என்றும் தெரிவித்தார்.

மூத்த ஆலோசகரும் நரம்பியல் கழகத்தின் இயக்குநருமான டாக்டர் சுரேஷ்பாபு கூறுகையில், ''வழக்கமான உடற்பயிற்சி, சீரான உணவு கடைப்பிடித்து புகைப்பிடித்தல் மற்றும் அதிகப்படியான மது அருந்துதல் போன்ற பழக்கங்களை தவிர்ப்பதன் மூலம் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை கணிசமாக குறைக்கலாம்,'' என்றார்.






      Dinamalar
      Follow us